உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகை பறிக்க முயன்ற கும்பலுக்கு வலை: பெண் காயம்

நகை பறிக்க முயன்ற கும்பலுக்கு வலை: பெண் காயம்

கெங்கவல்லி:கெங்கவல்லியை சேர்ந்தவர் அமுதா, 37. நேற்று இரவு, 7:30 மணிக்கு அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து சிவன் கோவில் வழியே, 'ஸ்கூட்டி'யில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த, 3 பேர், அமுதா அணிந்திருந்த, 5 பவுன் தாலிக்கொடி சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் அமுதா இறுக்கி பிடித்ததால், மொபட்டில் இருந்து விழுந்தார். உடனே அவர் கூச்சலிட, பைக்கில் வந்தவர்கள் தப்பினர். மக்கள், அமுதாவை மீட்டனர். காயம் அடைந்த அவர், கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !