உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருமணமான சிறுமி மாயம்

திருமணமான சிறுமி மாயம்

சேலம், சேலம், கோரிமேடு அருகே உள்ள அரசு விடுதியில் தங்கி உள்ள 17 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள, ஐ.டி.ஐ.யில் படிக்கிறார். நேற்று முன்தினம் காலை, ஐ.டி.ஐ., சென்ற அவர், மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. விடுதி நிர்வாகி புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்ததில், அச்சிறுமி சேலம், அய்யந்திருமாளிகையை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு அதே பகுதியில் உள்ள உறவினர்கள் மூலம் சிறுவயதில் குழந்தை திருமணம் நடத்தி வைக்கப்பட்டதும் தெரிந்தது. சமூக ஆர்வலர்கள் மூலம் மீட்கப்பட்ட சிறுமி, விடுதியில் தங்கி, ஐ.டி.ஐ.யில் பயின்று வந்ததும் தெரிந்தது. இந்நிலையில் குழந்தை திருமணம் செய்த வாலிபருடன் மீண்டும் அச்சிறுமி சென்றுவிட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை