உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டிச., 13ல் மக்கள் நீதிமன்றம்நிலுவை வழக்கை தீர்க்கலாம்

டிச., 13ல் மக்கள் நீதிமன்றம்நிலுவை வழக்கை தீர்க்கலாம்

சேலம், சேலம் மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம், டிச., 13ல் நடக்க உள்ளது. அதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்த்துக்கொள்ளலாம்.இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி அறிக்கை:சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சங்ககிரி, ஆத்துார், மேட்டூர், ஓமலுார், இடைப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு நீதிமன்றங்களில், டிச., 13ல், தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்க உள்ளது.அதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற முன் வழக்குகளை விரைவாகவும், சமரச முறையிலும், இலவசமாக தீர்வு காணலாம். அங்கு முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடும் கிடையாது. நீதிமன்ற கட்டணங்களை திரும்ப பெற வாய்ப்புள்ளது.அதனால் சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை, வங்கி, கல்வி கடன்கள், மோட்டார் வாகன விபத்து, விவாகரத்து தவிர்த்த குடும்ப பிரச்னை, தொழிலாளர் நலன், உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி