சேலம்: மத்திய ரயில்வேயின் பொறியியல் பணியால், திருவனந்தபுரம் - மும்பை வார ரயில், நாளை திருச்சூர் - தானே ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அதன்படி ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்-தனுார், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்துார், பங்காருப்பேட்டை, கிருஷ்ணரா-ஜபுரம், இந்துப்பூர், தர்மாவரம், அனந்தபூர், குண்டக்கல், மந்திராலயம் ரோடு, ஸ்டேஷன்-களில் நிறுத்தப்படும்.* சேலம் - ஈரோடு மார்க்கத்தில் மாவேலிபா-ளையம் - சங்ககிரி ஸ்டேஷன்கள் இடையே தண்டவாள புதுப்பிப்பு பணி நடக்கிறது. இதனால் போத்தனுாரில் நாளை காலை, 11:50க்கு புறப்பட வேண்டிய, போத்தனுார் - பரூனி வார சிறப்பு ரயில், 50 நிமிடம் தாமதமாக, 12:40க்கு புறப்படும். அதேபோல் இந்த ரயில், வரும், 13, 20, 27 ஆகிய நாட்களிலும், 50 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.