உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 15வது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க போக்குவரத்து பணியாளர்கள் கோரிக்கை

15வது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க போக்குவரத்து பணியாளர்கள் கோரிக்கை

சேலம் : போக்குவரத்து தொழிலாளர்களின், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க, அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்து பணியாளர் சம்மேளன, மாநில பொதுச்செயலர் பத்மநாபன், சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:போக்குவரத்து தொழிலாளர்களின், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சை உடனே தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு, 2023 செப்., 1 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். டிரைவர், கண்டக்டர்கள், பஸ்கள் மீது தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, நெல்லை, கும்பகோணம் ஆகிய கோட்டங்களின் தலைமை அலுவலகங்கள் முன் ஜூன், 18ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !