உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாசன் பிறந்தநாள்: அன்னதானம் வழங்கல்

வாசன் பிறந்தநாள்: அன்னதானம் வழங்கல்

ஓமலுார்: த.மா.கா., தலைவர் வாசனின், 61வது பிறந்த நாளை ஒட்டி, அக்கட்சி சார்பில், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமை வகித்து, பஸ் ஸ்டாண்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பயணியர், வியாபாரிகள், மக்கள் என, 2,000க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டனர். புறநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ