உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர் குழாய் உடைந்து தேங்கும்; தண்ணீரால் சுகாதார சீர்கேடு

குடிநீர் குழாய் உடைந்து தேங்கும்; தண்ணீரால் சுகாதார சீர்கேடு

வீரபாண்டி : குடிநீர் குழாய் உடைந்து, இரு மாதங்களுக்கு மேலாக வழிந்து குளம் போல் தேங்கும் தண்ணீரால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சேலம்-கோவை நான்கு வழிச்சாலை காகாபாளையம் தனியார் காலணி தொழிற்சாலை அருகேயுள்ள, சர்வீஸ் சாலையில் இருந்து நெடுஞ்சாலைக்கு செல்லும் இணைப்பு பகுதியில், இரு மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சரி செய்யாததால், தொடர்ந்து ஏராளமான குடிநீர் வழிந்து வீணாகி கொண்டிருக்கிறது. மாதக்கணக்கில் வழியும் தண்ணீரால் இப்பகுதி அரிக்கப்பட்டு குளம் போல் குடிநீர் தேங்கியுள்ளது.சர்வீஸ் சாலையில் இருந்து, நெடுஞ்சாலைக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், தேங்கியுள்ள தண்ணீரில் தடுமாறி விழுகின்றனர். தேங்கியுள்ள தண்ணீரில், பாசி படர்ந்து துர்நாற்றம் அடிப்பதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை