| ADDED : டிச 05, 2025 10:44 AM
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தினமும் ஏரா-ளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்-றனர். குறிப்பாக சனி, ஞாயிறு உள்ளிட்ட விடு-முறை நாட்களில் கூட்டம் அதிகம் வரும். இந்நி-லையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், ஏற்காடு அடிவாரப்பகுதியில், 'ஸ்கேட்டிங்' சென்றார். இது-குறித்து வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் பரவியது. அதில் அந்த நபர், 'வளைவுகளில் வேகமாக 'ஸ்கேட்டிங்' செல்வது, எதிரே வரும் வாகனங்களை மோதுவது போல செல்வது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வளைவுகளில் மோதுவது போல சென்றது தெரிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம-டைந்தனர். இதை பார்த்த மாநகர போலீசார், 'ஸ்கேட்டிங்' சென்றவர் குறித்து விசாரிக்கின்றனர். மேலும் ஏற்காடு மலைப்பாதையில் ஸ்கேட்டிங் செல்லக்-கூடாது. மீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து கன்னங்குறிச்சி, ஏற்காடு போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.