உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மண்டல கபடி போட்டி

மண்டல கபடி போட்டி

காரைக்குடி:மதுரை மண்டல அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த கபடி போட்டியில் கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 22 பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த கபடி வீரர்கள் பங்கேற்றனர். விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் போட்டி நடந்தது. விவேகானந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் சொக்கலிங்கம் துவக்கி வைத்தார். முதல்வர் மயில்வாகனன் முன்னிலை வகித்தார். இறுதிபோட்டியில் விவேகானந்தா பாலிடெக்னிக் அணியும், மதுரை லதா மாதவன் பாலிடெக்னிக் அணியும் மோதின. இதில் விவேகானந்த அணி வென்று முதலிடத்தை பிடித்தது. லதா மாதவன் அணி இரண்டாமிடம், நாகசிவா பாலிடெக்னிக் அணி மூன்றாமிடம், ஜி.எம்.எஸ்., எம்.ஏ.வி.எம்.எம்., அணி நான்காமிடத்தையும் பெற்றது. போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை உற்கல்வி இயக்குனர் கருப்பையா, என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் செந்தில் செய்திருந்தனர். ஆசிரியர் முத்துராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை