உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தெருக்களில் வெட்டப்படும் ஆடுகள் பயனில்லாத ஆடு வதை கூடம்

தெருக்களில் வெட்டப்படும் ஆடுகள் பயனில்லாத ஆடு வதை கூடம்

காரைக்குடி: காரைக்குடி நகராட்சியில் ஆடுவதைக் கூடத்தை தவிர்த்து பல்வேறு இடங்களில் ஆடுகள் வெட்டப்படுவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது.காரைக்குடி நகராட்சியில் ஆடு கோழி மற்றும் மீன் கடைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. சாலை ஓரங்களில் நாளுக்கு நாள் புற்றீசல் போல மீன்கடை இறைச்சி கடைகள் பெருகி வருகிறது. காரைக்குடி நகராட்சி வீதிகளில் ஆடுகளை அறுத்து விற்பனை செய்யப்படுகிறது. காரைக்குடி கழனிவாசல் அருகே ஆடுவதைக்கூடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகராட்சி சுகாதார அலுவலர் மேற்பார்வையில் ஆடுகளை பரிசோதனை செய்த பிறகு ஆடுகள் அறுக்கப்பட வேண்டும். மேலும் வெட்டப்பட்ட இறைச்சியின் மீது சுகாதாரமான இறைச்சி என்பதற்கு அடையாளமாக நகராட்சி முத்திரை குத்தப்படும். பின்னர் கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய வேண்டும். ஆனால் பல இறைச்சிக் கடைகளில் ஆடுகளை வதை கூடத்திற்கு கொண்டு செல்லாமல் ஆங்காங்கே ஆடுகளை அறுத்து விற்பனை செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது. நகராட்சி சுகாதார அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதே இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை