மேலும் செய்திகள்
தாக்குதலில் விவசாயி பலி த.வெ.க., நிர்வாகி சிக்கினார்
27 minutes ago
மோசடி வழக்கில் 2 பேர் கைது
15-Oct-2025
குடியரசு தின விழா தடகள போட்டி
15-Oct-2025
பஸ் கட்டணத்தில் குழப்பம்
15-Oct-2025
சிவகங்கை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், குமரேசன், ரவி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் பேசினார். மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் சிறப்புரையாற்றினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 160 படி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு முறையில் தாமாகவே மாதந்தோறும் வருமான வரிப் பிடித்தம் செய்யும் முறையை கைவிட்டு, பழைய நடைமுறைப்படி ஆசிரியர்களின் விருப்பப்படி வருமான வரி செலுத்திட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.
27 minutes ago
15-Oct-2025
15-Oct-2025
15-Oct-2025