உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் தக்காளி விலை சரிவு

மானாமதுரையில் தக்காளி விலை சரிவு

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் பட்டர்,சோயா பீன்ஸ்,முட்டைகோஸ்,சின்ன பாகற்காய் விலை உயர்ந்தும்,தக்காளி, பச்சை மிளகாய்,கத்தரிக்காய் விலை சரிந்தும் காணப்பட்டது.மானாமதுரை வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம்,திருப்பாச்சேத்தி, இளையான்குடி,சிவகங்கை,பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.இந்த சந்தையில் பட்டர் பீன்ஸ்,சோயா பீன்ஸ் ஆகியவை விலை உயர்ந்து கிலோ ரூ.280க்கும், பல்லாரி வெங்காயம் ரூ. 50க்கும், சின்ன பாகற்காய் ஒரு கிலோ ரூ.280க்கும், முட்டைகோஸ் பெரியது ஒன்று ரூ. 50க்கும் விற்பனையாகி வருகிறது.கத்தரிக்காய் கிலோ ரூ.60க்கும், சின்ன வெங்காயம் விலை குறைந்து ஒரு கிலோ ரூ. 50க்கும், தக்காளி ரூ. 50க்கும்,பச்சை மிளகாய் ரூ.80 என விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை