உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மண்ணுயிர் காத்து மன்னுயிர்காப்போம் திட்டத்திற்கு ரூ.1.50 கோடி

சிவகங்கை மண்ணுயிர் காத்து மன்னுயிர்காப்போம் திட்டத்திற்கு ரூ.1.50 கோடி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்திற்கு மானியமாக வழங்க ரூ.1.50 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.பசுந்தாள் உர உபயோகத்தை ஊக்குவிக்க இறவை பாசன பகுதிகளில் 4 ஆயிரம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மண்புழு உரம் தயாரித்து மண்வளத்தை மேம்படுத்திட விவசாயிக்கு இரண்டு மண்புழு உரப்படுக்கை வீதம் 300 விவசாயிகளுக்கு வழங்க ரூ.18 லட்சம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மண்புழு உரம், அமிர்த கரைசல், மீன் அமிலம் போன்றவை தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள 3 குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சம், மானாவாரி நிலங்களில் விவசாயிகள் லாபகரமான பயிர் சாகுபடி செய்ய கோடை உழவுக்கு ஏக்கருக்கு ரூ.500 மானியம் மற்றும் விதை மானியம் ஏக்கருக்கு ரூ.700 வீதம் 3 ஆயிரம் ஏக்கருக்கு வழங்கிட ரூ.36 லட்சமும், வட்டாரத்திற்கு ஒரு கிராமத்தை தேர்வு செய்து மாதிரி பண்ணைத்திடல் அமைத்து, இதர விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 12 விவசாயிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1.20 லட்சமும், வேம்பில் இருந்து கிடைக்கும் அசாடிராக்டின் மூலப்பொருள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பூச்சி நோய்களை கட்டுப்படுத்தவும், பசுந்தழை உரமாக பயன்படுத்தவும் 35 ஆயிரம் வேப்பங்கன்றுகள் மானியத்தில் வழங்க ரூ.7 லட்சமும், இயற்கையிலேயே உயிரி பூச்சிக்கொல்லி பண்புகளுடைய ஆடாதொடா நொச்சி போன்ற தாவரங்களின் செடிகள் தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும் நடவு செய்ய மானியமாக 1.5 லட்சம் கன்றுகள் வழங்க ரூ.3 லட்சமும், மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரக சம்பா, துாயமல்லி போன்ற ரகங்களின் விதைகள் 7 ஆயிரம் கிலோ மானியமாக வழங்க ரூ.1.75 லட்சமும் என மாவட்ட அளவில் ஒட்டு மொத்தமாக மானியமாக வழங்க ரூ.1.50 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்து, தங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை