உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் 3 செ.மீ., மழை மூன்று மணி நேரம் மின் துண்டிப்பு

திருப்புவனத்தில் 3 செ.மீ., மழை மூன்று மணி நேரம் மின் துண்டிப்பு

திருப்புவனம்: திருப்புவனத்தில் மூன்று செ.மீ., பெய்த மழைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கியது.திருப்புவனம் நகரில் மட்டும் 20 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. திருப்புவனம் நெல்முடிக்கரை துணை மின் நிலையத்தில் இருந்து நகர்ப்பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. லேசான தூறலுக்கே மின்வாரியம் மின் விநியோகத்தை நிறுத்தி விடுகிறது.நேற்று முன் தினம் இரவு ஏழு மணி முதல் ஏழரை மணி வரை லேசான துாறல் மழை பெய்தது. நகரின் 24 மணி நேரம் பெய்த மழை அளவு 28.4 மி.மீ., என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த லேசான மழைக்கே திருப்புவனத்தில் ஏழு மணிக்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மீண்டும் இரவு 10:30 மணிக்கு வழங்கப்பட்டது. அதன்பின் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலை இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை