| ADDED : மே 29, 2024 04:56 AM
சிவகங்கை : வி.ஏ.ஓ., உட்பட பல்வேறு பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வினை சிவகங்கையில் 39,500 பேர் 144 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், வனக்காப்பாளர் உள்ளிட்ட 6,244 காலிபணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்து தேர்வு ஜூன் 9 ம் தேதி காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 வினாக்களுக்கு 150 மதிப்பெண், பொது அறிவு 75 வினாக்கள், திறனறிவும் மனக்கணக்கு, நுண்ணறி 25 வினாக்கள் என 200 வினாக்களுக்கு 300 மதிப்பெண் வழங்கும் விதத்தில் தேர்வு நடைபெற உள்ளது.ஜூன் 9 அன்று நடக்கும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு இம்மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள் என 144 தேர்வு மையங்களில் நடக்கிறது.இதில், 39 ஆயிரத்து 500 பட்டதாரிகள் வரை எழுத உள்ளனர். 21 மாணவர்களுக்கு ஒரு தேர்வு அறை வீதம் ஒரு தேர்வு அறைக்கு தேர்வு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்படுவர். இது தவிர பறக்கும் படை, வினாத்தாள் எடுத்து செல்லும் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.