| ADDED : மார் 28, 2024 05:51 AM
அ.தி.மு.க., வேட்பாளர் திட்டம்திருப்புத்துார்: சிவகங்கை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் 5000 தொண்டர்களை டெல்லிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், எம்.எல்.ஏ., திருப்புத்துாரில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்தார்.கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். நகர் செயலர் இப்றாம்சா வரவேற்றார். வேட்பாளர் சேவியர் தாஸ், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.மாவட்டச் செயலர் செந்தில்நாதன் பேசியதாவது: எதிர்த்து நிற்பவர் காங்.,ல் கார்த்தி அவரைக் காங்., கூட்டணிக்கட்சியினரே தோற்கடித்து விடுவார்கள். எதிரில் நிற்பவரை தெரியாது. மற்றொருவர் ஆந்திராவிலிருந்து வந்தவர் என்று ஆணவத்துடன் கூறுகிறார். அவர் இனி மக்களை சந்திக்க எந்த காலத்திலும் வர முடியாது என்பதை ஏப்.19ல் நிலை நாட்ட வேண்டும். நான் எம்.பி.,ஆக இருந்த போது 1300 தொண்டர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்றேன். வேட்பாளர் சேவியர் தாஸ் 5000 பேரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல உள்ளார். அதற்கான வலிமையும் அவரிடம் உண்டு என்றார்.