உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் கல்வி கடன் 190 பேருக்கு ரூ.8.25 கோடி

சிவகங்கையில் கல்வி கடன் 190 பேருக்கு ரூ.8.25 கோடி

சிவகங்கை, : சிவகங்கையில் நடந்த கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி கடன் முகாமில் 190 பேர்களுக்கு ரூ.8.25 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.சிவகங்கை மருதுபாண்டியர் நகர் கல்வித்துறை கூட்டரங்கில் முன்னோடி வங்கி சார்பில் சிறப்பு கல்விக்கடன் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் பி.ஏ., (வளர்ச்சி) எஸ்.அன்பு, முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் உதயகுமார், விஜயசரவணன், ஸ்டேட் பாங்க் மேலாளர் முத்து, இந்தியன் வங்கி மேலாளர் சந்தீப்குமார், ஐ.ஓ.பி.,மேலாளர் பிக்ரம் கேசரி ஷாஹு, கனரா வங்கி மேலாளர் ஜெய்சங்கர், தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் ஜீவா, பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் அருண் பங்கேற்றனர்.முகாமில் நேற்று வரை விண்ணப்பித்த 190 மாணவர்களுக்கு கல்வி கடனாக ரூ.8.25 கோடியை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். நேற்று நடந்த முகாமில் மட்டுமே 56 மாணவர்கள் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ