உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நான்கு வழிச்சாலை தரத்தை உயர்த்த திட்டம்; சென்சார் பொருத்திய வாகனம் ஆய்வு

நான்கு வழிச்சாலை தரத்தை உயர்த்த திட்டம்; சென்சார் பொருத்திய வாகனம் ஆய்வு

திருப்புவனம் : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையை தரம் உயர்த்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 15 சென்சார்களுடன் கூடிய வாகனத்தை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. தினசரி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில் நான்கு வழிச்சாலையின் தரம், உறுதி தன்மை, தினசரி செல்லும் வாகனத்தின் தன்மைக்கு ஏற்ப சாலை சேதமடைகிறதா என மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 45 மீட்டர் அகலமுள்ள சாலையில் 15 மீட்டர் அகலத்தில் மட்டுமே வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 12 மீட்டரில் மட்டும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு என தயாரிக்கப்பட்ட வாகனத்தின் முன்புறம் 15 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்கள் 3 மீட்டர் அகலத்தில் உள்ள சாலையை ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளும். அதற்கு அடுத்து மறுபடியும் 3 மீட்டர் அகலத்தை ஸ்கேன் செய்யும், நான்கு வழிச்சாலையில் மொத்தம் நான்கு முறை இந்த வாகனம் கடந்து சென்று ஸ்கேன் செய்யும், மேலும் வாகனத்தின் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்தப்பட்டு சாலைகள் பதிவு செய்யப்படுகின்றன. வாகனத்தின் பின்புற சக்கரங்களில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு கடக்கும் தூரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு சாலைப்போக்குவரத்து தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்களிடம் சமர்பிக்க உள்ளனர். ஸ்கேன் பதிவுகளை ஆய்வு செய்து தேவையான இடங்களில் சாலையின் தரத்தை மேம்படுத்தவும், சாலையை உயரமாக அமைக்கவும் திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.ஆண்டுக்கு இரு முறை இது போன்ற ஆய்வுகள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ