உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

சிவகங்கை:சாட்சி சொல்ல ஆஜராகாத டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.திருநெல்வேலி மாவட்ட குற்றப் பதிவேடு டி.எஸ்.பி., பொன்ரகு. இவர் 2016ல் சிங்கம்புணரி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது அக்.16ல் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் 4 முறை சாட்சி சொல்ல ஆஜராகாததால் நீதிபதி கோகுல் முருகன், மார்ச் 11ல் ஆஜராக கூறி டி.எஸ்.பி.,க்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.* தேவகோட்டை மகளிர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பேபிஉமா. தற்போது திருச்சி இ.புதுார்குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவர் தேவகோட்டையில் இருந்தபோது 2020 ஆக.16ல்நடந்த போக்சோ வழக்கில் விசாரணைக்கு 6 முறை ஆஜராகாததால் இவரையும் மார்ச் 11 அன்று ஆஜராக கூறி பிடிவாரன்ட் பிறப்பித்து இந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை