உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வழிப்பறி முயற்சி: ஒருவர் கைது

வழிப்பறி முயற்சி: ஒருவர் கைது

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லுாரி பின்புறம் உள்ள கண்டனுார் சுரங்கப்பாதையில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.அப்போது சிலர் காரை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தனர். போலீசார் வாகனத்தை ஆய்வு செய்த போது அதில் கையுறை கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்துள்ளது.போலீசார் சோதனை செய்ததை பார்த்ததும் அங்கிருந்து 3 பேர் தப்பினர். ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சுப்பிரமணியபுரம் சோமன் மகன் கிருஷ்ணமூர்த்தி 33, என்பதும் வழிப்பறி செய்ய முயற்சித்தது தெரிய வந்தது. கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்து கத்தி, 4 கையுறைகள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி