உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் பிரசாரத்தை துவங்கிய பா.ஜ.,கூட்டணி வேட்பாளர்

திருப்புவனத்தில் பிரசாரத்தை துவங்கிய பா.ஜ.,கூட்டணி வேட்பாளர்

திருப்புவனம், : சிவகங்கை மாவட்ட கடைகோடி தாலுகா திருப்புவனம். அ.தி.மு.க.,விற்கு சாதகமான திருப்புவனத்தில் இருந்து பிரசாரம் செய்தால் வெற்றி நிச்சயம் என வேட்பாளர்கள் நம்புகின்றனர். இதனால் சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி, லோக்சபா தொகுதி தேர்தலாக இருந்தாலும் சரி பலரும் திருப்புவனத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது வழக்கம். நேற்று பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தேவநாதன் அதே சென்டிமெண்டாக திருப்புவனத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். கூட்டணி கட்சியினர், பா.ஜ., வினர் அவருக்கு அணிவித்த சால்வையை மீண்டும் அவர்களுக்கே அணிவித்து குஷிப்படுத்தினார்.

மானாமதுரை

மானாமதுரைக்கு வந்த அவருக்கு தேவர் சிலை அருகில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அவர் ஓட்டு சேகரித்தார்.பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன்,அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் தேர் போகி பாண்டி, பா.ஜ.,புறநகர் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், நகரத் தலைவர் நமகோடி(எ) முனியசாமி, இளையான்குடி ஒன்றிய தலைவர்கள் ராஜ பிரதீப், சிலம்பரசன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை

சிவகங்கை தொகுதி பா.ஜ. கூட்டணி வேட்பாளர் தேவநாதன் நேற்று மதியம் தேவகோட்டை வந்தார். பஸ் ஸ்டாண்ட் அருகே நகர செயலாளர் கமலக்கண்ணன், மாநில இளைஞர் அணி இணை செயலாளர் முருகன் , மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் குமார் தலைமையில் அ.ம.மு.க.,வினர் வரவேற்றனர். நகராட்சி அலுவலகம் அருகில் பா.ஜ., நகர தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் ராமசுப்பையா தலைமையில் கட்சியினர், பன்னீர் செல்வம் அணி சார்பில் நகர செயலாளர் லட்சுமணன் தலைமையில் கட்சியினர் , இந்து முன்னணி நகர தலைவர் சுரேஷ் தலைமையில் அமைப்பினர், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். பா.ஜ. மாவட்ட தலைவர் சத்தியநாதன், காசிராஜா, பன்னீர் செல்வம் அணி அசோகன், உடன் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி