உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் நாளை உங்கள் ஊரில் முகாம்

திருப்புத்துாரில் நாளை உங்கள் ஊரில் முகாம்

சிவகங்கை : திருப்புத்துாரில் நாளை (ஜூன் 26) உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மக்களை தேடி, மக்கள்குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு அதிகாரிகள் களத்திற்கே செல்லும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் திருப்புத்துார் வட்டத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினம் அனைத்து துறை அதிகாரிகள் தாலுகா அளவில் உள்ள அனைத்து துறைகளை கள ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.ஜூன் 26 மாலை 4:30 முதல் 6:00 மணி வரை திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் அருகே உள்ள ஆர்.கே., மகாலில் மக்கள் சந்திப்பு முகாம் நடைபெறும். இதில் மக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கி பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி