உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரியில் டெண்டர் ரத்து கண்டித்து சேர்மன், கவுன்சிலர்கள் தர்ணா

சிங்கம்புணரியில் டெண்டர் ரத்து கண்டித்து சேர்மன், கவுன்சிலர்கள் தர்ணா

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் டெண்டர் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து சேர்மன், கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.இவ்வொன்றியத்தில் பொது நிதியிலிருந்து ரூ.45 லட்சம் செலவில் 17 பணிகளை முடிக்க டெண்டர் விடப்பட்ட நிலையில் ஜூலை 24 ல் ரத்து செய்யப்பட்டது. இதை கண்டித்து சேர்மன் திவ்யா பிரபு (அ.தி.மு.க), துணை சேர்மன் சரண்யா ஸ்டாலின் (அ.தி.மு.க), தி.மு.க., கவுன்சிலர்கள் உதயசூரியன், கலைச்செல்வி, ரம்யா, காங்., கவுன்சிலர் சத்தியமூர்த்தி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இளங்குமார், பெரியகருப்பி ஆகியோர் வாயில் கருப்பு துணி கட்டி ஒன்றிய அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். திவ்யா பிரபு: வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் விட்டு, 3 முறை ரத்து செய்து விட்டார்கள். மாவட்ட அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. நாங்கள் தேர்வு செய்யும் வேலைகளை மட்டும் ரத்து செய்கிறார்கள். என்ன காரணம் என தெரியவில்லை. அ.தி.மு.க., சேர்மன் என்பதால் நிறுத்துகிறார்கள். ஓட்டுபோட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம், என்றார். இப்போராட்டத்தில் கவுன்சிலர்கள் சசிகுமார் (அ.தி.மு.க), உமா (தே.மு.தி.க) பங்கேற்கவில்லை.பி.டி.ஓ., ராஜேந்திரகுமார்: நிலுவையில் உள்ள பணிகளுக்கு நிதி பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளதால் புதிய பணிகளை நிறுத்தி வைத்து நிதி வந்தவுடன் நிறைவேற்ற கலெக்டர் அறிவுறுத்தினார். அதன் பேரிலேயே டெண்டர் ரத்து செய்யப்பட்டது. நிதி வந்ததும் பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார்.வெட்கமாக இருக்கிறதுதி.மு.க., கவுன்சிலர் புலம்பல்சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த தர்ணா போராட்டத்தின் போது, வெட்கமும், வேதனையுமாக இருப்பதாக நெற்றியில் நாமமும், வாயில் கருப்புத் துணியுடனும் வந்த தி.மு.க., கவுன்சிலர் உதயசூரியன் புலம்பினார். அவர் தெரிவித்ததாவது, இவ்வொன்றியத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் 3 பேர் இருந்தும் எங்களை அதிகாரிகள் புறக்கணிக்கிறார்கள். மாவட்டச் செயலாளர் ஒத்துழைப்பும் எங்களுக்கு கிடையாது. சில கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் வேண்டி லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாக நோட்டீஸ் ஒட்டி இருந்தார்கள். நாங்கள் கெஞ்சி கேட்டதால் ஓட்டு போட்டார்கள். அவர்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது. எங்கள் பகுதி ஊராட்சிகளில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. அதற்கு இங்குள்ள அதிகாரிகள் தான் காரணம். அமைச்சரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சேர்மன் அ.தி.மு.க., என்பதால் அவரோடு, அமைச்சருக்கு மனக்கசப்பு இருக்கலாம். அதற்காக எங்களையும் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. நாங்களும் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் தானே. இப்படியே போனால் திரும்ப போய் மக்களிடம் எப்படி ஓட்டு கேட்க முடியும். ஆளுங்கட்சி கவுன்சிலராக இருந்து கொண்டு இப்படி போராட்டம் நடத்துவது வெட்கமும், வேதனையமாக இருக்கிறது, என்று புலம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை