உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சிவகங்கை: எஸ்.புதுார், காளையார்கோவில், இளையான்குடியில் நாளை 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஆக., 23 காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை , எஸ்.புதுார் வட்டாரத்தில் உள்ள புழுதிபட்டி, தர்மபட்டி, கொண்டபாளையம், கே.புதுப்பட்டி, கரிசல்பட்டி, கீழவயல், மணலுார், முசுண்டபட்டி கிராமங்களுக்கு முசுண்டபட்டி சமுதாயக்கூடம், காளையார்கோவில் வட்டாரத்தில் உள்ள மறவமங்கலம், சிரமம், சிலுக்கப்பட்டி, வேளாரேந்தல், உசிலங்குளம், சேதாம்பல், மேலமருங்கூர், ஏரிவயல், இலந்தைக்கரை, மாரந்தை ஆகிய கிராமங்களுக்கு மறவமங்கலம் மகளிர் குழு கட்டடத்திலும், இளையான்குடி வட்டாரத்தில் சாலைக்கிராமம், முத்துார், காட்டனுார், அளவிடங்கான், புதுக்கோட்டை, பூலாங்குடி, சாத்தனுார், சமுத்திரம், வண்டல், விசவனுார், சீவலாதி கிராமங்களுக்கு சாலைகிராமம் உடையார் திருமண மகாலில் முகாம் நடைபெறும். இதில் மக்கள் பங்கேற்று, மனுக்களை வழங்கி பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி