உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடியும் நிலையில் சமுதாய கூடம்

இடியும் நிலையில் சமுதாய கூடம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாழடைந்த சமுதாயக்கூட கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இவ்வொன்றியத்தில் எருமைப்பட்டி ஊராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய கூட கட்டடம் கட்டப்பட்டது. கிராமத்தில் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளும், அரசுத்துறை சார்ந்த விழாக்களும் இக்கட்டடத்தில் தான் நடைபெற்று வந்தது. தற்போது கட்டடத்தின் சுவர்களிலும், கூரையிலும் வெடிப்பு ஏற்பட்டு பாழடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. ஆனாலும் கிராமத்தில் வேறு சமுதாயக்கூடம் இல்லாததால் கிராம மக்கள் ஆபத்தை உணராமல் இக்கட்டடத்திலேயே நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். பாழடைந்த சமுதாயக் கூட கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை