உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருமகள் புகார்: மாமியார் கைது

மருமகள் புகார்: மாமியார் கைது

காரைக்குடி: சேலம் மாவட்டம் ஆத்துாரைச் சேர்ந்தவர் ரத்தின செல்வம் மனைவி வினோதினி 30.இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவர் ரத்தினசெல்வம் நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். வினோதினி கணவரை சேர்த்து வைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் அல்லது மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் ரத்தின செல்வத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ரத்தினசெல்வம் கண்டுகொள்ளாததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வினோதினி காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள கணவர் ரத்தின செல்வம் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். மாமியார் தனலட்சுமி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காரைக்குடி போலீசில் வினோதினி புகார் அளித்தார். தனலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ