உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் ராணிக்கெட் வைரஸ் கழிச்சல் நோயால் கோழிகள் இறப்பு

காரைக்குடியில் ராணிக்கெட் வைரஸ் கழிச்சல் நோயால் கோழிகள் இறப்பு

காரைக்குடி : காரைக்குடியில் தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் ராணிக்கெட் வைரஸ் தாக்குதலால் நாட்டுக் கோழிகள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு பலியாகி வருகிறது.காரைக்குடி வட்டாரத்தில் கோட்டையூர், புதுவயல், கண்டனுார், அரியக்குடி, பீர்க்கலைக்காடு, சூரக்குடி, காரைக்குடி பகுதியில் கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளும், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளும், 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளும் உள்ளன. மேலும் சண்டைச் சேவல் உட்பட விலை உயர்ந்த சேவல்களை இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் வளர்த்து வருகின்றனர். ஆண்டுதோறும் வரக்கூடிய வெயில் சீசன் மற்றும் கோடை மழையால் கோழிகளுக்கு ராணிக்கெட் வைரஸ் தாக்குதலால் வெள்ளை கழிச்சல் நோய் உருவாகும். இந்த நோய்க்கு, வெயில் தொடங்குவதற்கு முன்பாக கால்நடை மருந்தகங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் பல மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை நிலவியதாலும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லாததாலும் நாட்டுக்கோழிகளுக்கு தடுப்பூசி போடுவதில்லை. இதனால், விவசாயிகள் வளர்க்கும் நாட்டுக்கோழிகள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு பலியாகி வருகிறது. இதனால் கோழி வளர்ப்போர் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. இதனை தடுக்க அந்தந்த கிராமங்களுக்கு சென்று முன்னதாக விவசாயிகளுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மருத்துவர்கள் கூறுகையில்: கோழிகளுக்கு வெயில் தொடங்கும் முன்பே தடுப்பூசி போட வேண்டும். வைரஸ் தாக்கப்பட்ட கோழியை கண்டறிந்து அதனை தனிமைப்படுத்த வேண்டும். மற்ற கோழிகளுடன் விடும்போது பிற கோழிகளும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும். கோழிகளுக்கு, அந்தந்த கால்நடை மருந்தகங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை