உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழுதான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருவிற்கு அனுப்பி வைப்பு  கலெக்டர் தலைமையில் ஆய்வு 

பழுதான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருவிற்கு அனுப்பி வைப்பு  கலெக்டர் தலைமையில் ஆய்வு 

சிவகங்கை: எம்.பி., தேர்தலில் பழுதான ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பெங்களூரு பெல் நிறுவனம் அனுப்புவதற்காக, கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் பிரித்து எடுத்தனர்.கடந்த எம்.பி., தேர்தலின் போது ஓட்டுப்பதிவு இயந்திரம் 2, 4 கட்டுப்பாட்டு இயந்திரம், 10 ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் பழுதானது. அவற்றை தற்போது சிவகங்கை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள கோடவுனில் இருந்து பிரித்து, பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பும் பணி நேற்று நடந்தது.கலெக்டர் தலைமையில் நடந்த பணியில், சர்வ கட்சியினர் சார்பில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜெயராமன், அ.தி.மு.க., மாநில குழு தேவதாஸ், காங்., நகர் தலைவர் விஜயகுமார், ஆம் ஆத்மி மாவட்ட செயலாளர் ராமு உள்ளிட்ட சர்வ கட்சியினர் பங்கேற்றனர்.இந்த பணியின் போது 2009 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 305 ஓட்டுப்பதிவு இயந்திரம், 555 கட்டுப்பாட்டு இயந்திரம் என 860 இயந்திரங்களில் உள்ள ஒட்டுக்களின் காலாவதி தேதி முடிந்துவிட்டதால், அவற்றை அழிப்பதற்காகவும் இயந்திரங்களை பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். தேர்தல் தாசில்தார் மேசியதாஸ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை