உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை : மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற ஒரு ஆண்டாக காக்க வைப்பதை கண்டித்து சிவகங்கையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 21 விதமான நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. அதில் 6 விதமான நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமும், மற்றவை வருவாய்துறை மூலம் நிறைவேற்றி வருகின்றனர். 1,000 மாற்றுத் திறனாளிகள் நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர். இன்னும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கேட்டு 800 பேர் வரை விண்ணப்பித்து ஒரு ஆண்டிற்கும் மேலாக காத்திருக்கின்றனர்.இவர்களுக்கு இது வரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் முத்து ராமலிங்க பூபதி, செயலாளர் இன்னாசி ராஜா தலைமை வகித்தனர். இந்திய கம்யூ., மூத்த நிர்வாகி விஸ்வநாதன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மோகன் துவக்க உரை ஆற்றினர்.மாவட்ட துணை தலைவர் திருநாவுக்கரசு, துணை செயலாளர் மனோகரன், பொருளாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் யூசுப் சுலைமான், இளையான்குடி ஒன்றிய தலைவர் கருப்புச்சாமி, சிவகங்கை ஒன்றிய செயலாளர் கொங்கையா பங்கேற்றனர். பின்னர் கலெக்டரின் பி.ஏ., (பொது) முத்துக்கழுவனிடம் மனுக்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை