உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் தர்பண பொட்டலில் குடிநீர் வசதியின்றி பக்தர்கள் அவதி

திருப்புவனம் தர்பண பொட்டலில் குடிநீர் வசதியின்றி பக்தர்கள் அவதி

திருப்புவனம் : திருப்புவனம் திதி பொட்டலில் குடிக்க தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். புண்ணிய நகரான திருப்புவனத்திற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு மகாளய, தை, புரட்டாசி அமாவாசைக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர். மறைந்தவர்கள் நினைவாக மோட்ச விளக்கு ஏற்றவும் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தர நாயகி அம்மன் கோயிலுக்கு வருகின்றனர்.மதுரை, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினசரி வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் இடத்தில் குடிக்க தண்ணீர் வசதியில்லை. கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கித்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.பக்தர்கள் கூறுகையில், திதி பொட்டலில் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் அங்கு சேகரமாகும் குப்பைகளை மட்டுமே அகற்றுகின்றனர். மேலும் குளியல் தொட்டியும் அமைத்துள்ளனர். பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கும் தேவஸ்தானம் பக்தர்களுக்கு எவ்வித ஏற்பாடும் செய்வதில்லை. கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திதி பொட்டலில் இதுவரை குடிநீர் வசதி செய்து தரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை