உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழுதான அரசு பஸ்: தவித்த கிராமப்புற பயணிகள்

பழுதான அரசு பஸ்: தவித்த கிராமப்புற பயணிகள்

திருப்புவனம் : திருப்புவனத்தில் தொலை துாரம் இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மதுரையில் இருந்து தினசரி கமுதிக்கு திருப்புவனம், மானாமதுரை, அபிராமம் வழியாக அரசு பஸ்கள் சென்று வருகின்றன. கமுதி, அபிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த பஸ்களை நம்பியே மதுரை நகருக்கு வருகின்றனர்.கமுதி கிளை பணிமனை மூலம் கமுதியில் இருந்து மண்டலமாணிக்கம், கூடலாவூரணி, வீரசோழன், நரிக்குடி, மாரநாடு, கட்டனுார், திருப்புவனம் வழியாக மதுரைக்கும், மதுரை கிளை பணிமனை மூலம் இதே வழித்தடத்தில் கமுதி வரை ஒரு பஸ்சும் இயக்கப்படுகின்றன. தினசரி இரு பணிமனை மூலம் தலா மூன்று முறை இப்பஸ்கள் இயக்கப்படுகின்றன.100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக இயக்கப்படும் இப்பஸ் பெரும்பாலும் நீண்டதுார டவுன் பஸ்சாகவே இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை நம்பி கிராமமக்கள் பலரும் மதுரை சென்று வருகின்றனர்.இப்பாதையில் புதிய பஸ்கள் இயக்கப்படுவதே இல்லை. பழுதான பஸ்களையே இரு பணிமனை மூலமாக இயக்கி வருகின்றனர். நேற்று காலை மதுரையில் இருந்து கிளம்பிய டிஎன் 63 என் 1677 என்ற எண்ணுள்ள பஸ் திருப்புவனம் புதுாரை கடந்த போது பழுதானது.நீண்ட நேரம் போராடியும் பழுதை சரி செய்ய முடியவில்லை. பயணிகளை இறக்கி மாற்று பஸ்களில் அனுப்பி விட்ட பின் பணிமனைக்கு சரி செய்ய திருப்பி எடுத்து சென்றனர். இதனால் நீண்ட துாரம் செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் இந்த பஸ்சை நம்பி கமுதி, வீரசோழன், கூடலாவூரணி, மண்டலமாணிக்கம் செல்ல வேண்டிய கிராமமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.100க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் சென்று வரும் வழித்தடத்தில் புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை