உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் ஒரே மாதத்தில் 102 பேரை கடித்த நாய்கள்

சிவகங்கையில் ஒரே மாதத்தில் 102 பேரை கடித்த நாய்கள்

சிவகங்கை,: சிவகங்கை மாவட்டத்தில் நாய் தொல்லையால் ஒரே மாதத்தில் 102 பேர் கடிபட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.சிவகங்கையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தினமும் நாய் கடியால் 10 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ரோட்டில் நாய்கள் குறுக்கே செல்லும்போது டூவீலரில் செல்வோர் விபத்து குள்ளாகின்றனர். நாய்க்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு நிதி ஒதுக்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் சிவகங்கையில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சிவகங்கை பகுதியில் தினமும் நாய் கடியால் 8 முதல் 10 பேர் வரை பாதித்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி 86, பிப்.52 , மார்ச் 96, ஏப். 104, மே 117, ஜூன் 106, ஜூலை 102 பேர் நாய்களால் கடிபட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை