உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டிரைவர் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது

டிரைவர் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது

தேவகோட்டை : வேன் டிரைவர் கொலையில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஜீவா நகரைச் சேர்ந்த சேதுராஜன் மகன் பாண்டியராஜ்.38., வேன் டிரைவர். இரு மாதங்களுக்கு முன்பு பாண்டியராஜை மது அருந்த இவரது நண்பர் பூங்குடியேந்தல் செல்வக்குமார் அழைத்து சென்றார். தேர்போகி சாலையில் செல்வக்குமாரின் நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து மது அருந்தினர். இதில் தகராறு ஏற்பட்டு பாண்டியராஜனை கொலை செய்து அருகில்உள்ள முத்து நாட்டு கண்மாயில் புதைத்தனர். கொலை வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட செல்வக்குமார், சின்ன கோடகுடி ராஜா இடத்தை காண்பிக்க பிணத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து இக்கொலையில் தொடர்புடைய தேரளப்பூர் பூமிநாதன் மகன் கரண், 24. அதே ஊரைச் சேர்ந்த சிவக்குமார் மகன் கார்த்திக்பாண்டியன், 23. இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை