உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேங்காய் நார் சேமிப்பு கிடங்கில் தீ

தேங்காய் நார் சேமிப்பு கிடங்கில் தீ

சிங்கம்புணரி ; சிங்கம்புணரி அருகே தீயணைப்பு வாகனம் வர வழியில்லாததால் கயிறு மூலப்பொருள்கள் எரிந்து சாம்பலானது.இவ்வொன்றியத்தில் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பட்டகோவில்களம் கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. அப்பகுதி மக்கள் குறுக்கே ஓடும் பாலாறு வழியே சென்று வருகின்றனர்.இங்கு உயர்மட்ட பாலம் அமைக்க பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களும், விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமம் அருகே சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் சேமிப்புக் கிடங்கில் நேற்று மாலை தீ பற்றியது.அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஆனால் தீயணைப்பு வாகனம் பல்வேறு வழிகளில் கிராமத்திற்குள் வர முயற்சி செய்தும் சரியான பாதை வசதி இல்லாததால் குறித்த நேரத்தில் வர முடியவில்லை.2 மணி நேரத்திற்கு மேலாக தீ எரிந்த நிலையில் அப்பகுதி மக்களே குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.இதை தொடர்ந்து தாமதமாக வந்த தீயணைப்பு வாகனம் மூலம் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.இக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்ல வசதியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை