| ADDED : ஏப் 01, 2024 10:18 PM
மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா வருகிற ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.சிவகங்கை சமஸ்தானம்தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா வருகிற ஏப்.14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியிலிருந்து 10:30மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணிக்குள்ளும், ஏப்ரல் 22ம் தேதி திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகர்கள் செய்து வருகின்றனர்.சித்திரைத் திருவிழா துவங்க இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் மானாமதுரை நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.8 லட்சம் செலவில் வைகை ஆற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம்,கமிஷனர் ரங்கநாயகி, பொறியாளர் சீமா பார்வையிட்டு வருகின்றனர்.