உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் தொடர் மழை வைகையில் பெருக்கெடுத்த நீர்

மானாமதுரையில் தொடர் மழை வைகையில் பெருக்கெடுத்த நீர்

மானாமதுரை : மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையினால் வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர் நிலைகளிலும் மழை நீர் நிரம்பி வருகிறது.விவசாயிகள் கூறியதாவது: மானாமதுரையில் விவசாய பணிகளை துவங்குவதற்கு ஏதுவாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த வருடம் விவசாயம் செய்வதற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதால் அதிக மகசூல் மூலம் லாபம் கிடைக்க வழி ஏற்பட்டுஉள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை