உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கால்பந்து பயிற்சி நிறைவு

கால்பந்து பயிற்சி நிறைவு

சிவகங்கை: சிவகங்கையில் கால்பந்து கழகம் நடத்திய கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. முகாமில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான நிறைவு விழாவில் வீரர்களுக்கு சான்று மற்றும் சீருடை வழங்கப்பட்டது. தி.மு.க., அயலக அணி சரவணன், நேரு யுவகேந்திரா (ஓய்வு) ஜவஹர், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பாரூக், ரமேஷ் கண்ணா, நகராட்சி கவுன்சிலர் மகேஷ், வழக்கறிஞர் மகேந்திரகுமார், வி.ஏ.ஓ.,க்கள் மூர்த்தி, முத்து செல்வம், ஆசிரியர் சசிக்குமார், ரவி, அசோகன் பங்கேற்றனர்.கால்பந்து கழக ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, சங்கர், சிவநேசன் விழா நிறைவுரை ஆற்றினர். கால்பந்து கழக செயலாளர் சிக்கந்தர், பயிற்றுனர் கார்த்தி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்