உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில் முன் அகற்றப்படாத குப்பை

கோயில் முன் அகற்றப்படாத குப்பை

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயில் வாசல் முன் குப்பையை கொட்டுவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.காசியை விட வீசம் அதிகம் என போற்றப்படும் புண்ணிய ஸ்தலம் திருப்புவனம். இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் இங்கு வழங்கினால் முன்னோர்கள் ஆசீர்வதிப்பதாக ஐதீகம், அமாவாசை உள்ளிட்ட தினங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர்.வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் வழங்கும் பக்தர்கள் பின் புஷ்பவனேஷ்வரரை வழிபட்டு செல்வார்கள், அம்மன் சன்னதி கோபுரம் வாசல் முன் வீதி முழுவதும் குப்பை கொட்டி சுகாதாரக்கேடு நிலவுகிறது. குப்பைகளை அகற்ற வலியுறுத்தியும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் கோயிலில் தினசரி அன்னதானமும் நடைபெறுகிறது.குப்பை, கழிவுகளுக்கு மத்தியில் உணவருந்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் அம்மன் சன்னதி வாசல் முன் குப்பை கொட்ட அனுமதிக்க கூடாது. குப்பை தொட்டியை நிரந்தரமாக வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை