உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்சாரம் தாக்கி சிறுமி பலி; உறவினர்கள் சாலை மறியல்

மின்சாரம் தாக்கி சிறுமி பலி; உறவினர்கள் சாலை மறியல்

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிக்கு இழப்பீடு கோரி உறவினர்கள் சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிரான்மலை அருகே காலடி பச்சேரி பகுதியை சேர்ந்த அரியலிங்கம் நேற்று முன்தினம் மடப்புரம் கோயிலில் நேர்த்தி செலுத்த வந்தார். அவரது உறவினரான ராஜ்குமார், அவரது மனைவி சங்கீதபிரியா, 8 வயது மகள் ஆகியோரும் வந்தனர். அங்கு விளையாடிய சிறுமி மின்கம்பத்திற்காக நடப்பட்டிருந்த இழுவை கம்பியை பிடித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.சிறுமியின் உடலை திருப்புவனம் போலீசார் உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சிறுமி உறவினர்கள் சிவகங்கை மானாமதுரை ரோட்டில் மருத்துவமனை சந்திப்பில் சிறுமி உயிரிழப்பிற்கு கோவில் நிர்வாகம் தான் காரணம் எனவும் கோவில் நிர்வாகத்தை கண்டித்து இழப்பீடு வழங்க கோரியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தாசில்தார் சிவராமன், கோட்டாட்சியர் விஜயகுமார், டி.எஸ்.பி.,கள் சிபிசாய் சவுந்தர்யன், கண்ணன், இன்ஸ்பெக்டர் லிங்கப்பாண்டி பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை