உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில்களில் ஆடிப்பூர திருவிழா வளையல் அலங்காரத்தில் அம்மன்

கோயில்களில் ஆடிப்பூர திருவிழா வளையல் அலங்காரத்தில் அம்மன்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து அம்மன், சிவன், பெருமாள் கோயில்களில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்பாள் வளையல் அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஆடியில் செவ்வாய், வெள்ளி, ஆடிப்பூரம் போன்ற நாட்களில் அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்துவர். முத்துமாரியம்மன், காளியம்மன் கோயில்களில் அம்மனுக்கு பெண்கள் பச்ச மஞ்சள் அபிேஷகம் செய்தும், மாவிளக்கு, எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று ஆடிப்பூர விழாவை முன்னிட்டு சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. பெண்கள் வளையல் பெற்று சென்றனர். * நாட்டரசன்கோட்டை கரிகால சோழீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி, அம்பாளுடன் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். *காரைக்குடி சங்கரமடத்தில், பிராமணர் சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெண்கள் திருவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். * சிவகங்கை விஷ்ணு துர்க்கை கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். கோயிலில் சண்டியாகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். திருப்புத்துார்: திருப்புத்துார் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் திருவாடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு ஆண்டாளுக்கு அபிேஷகம்நடந்தது. தொடர்ந்து அலங்காரத்தில் ஆண்டாளுக்கு தீபாராதனை நடந்தது. பெண்கள் ஆண்டாள் நாச்சியாருக்கு வளையல், மஞ்சள், வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டனர். நாளை கருட பஞ்சமியை முன்னிட்டு கருடாழ்வாருக்கு காலை 10:00 மணிக்கு அபிேஷக, ஆராதனை நடைபெறும். திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிவகாமி அம்மனுக்கு மதியம் அபிேஷகம் நடந்து வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலையில் அம்மன் சன்னதியில் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.திருப்புத்துார் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு பெண்கள் அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு வழங்கினர். தொடர்ந்து பெண்கள் வளையல் சமர்ப்பித்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு சாத்தப்பட்ட மஞ்சள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ