| ADDED : ஏப் 25, 2024 05:53 AM
சிவகங்கை, : அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 'ைஹடெக் லேப்' துவக்க இணைய தள இணைப்பிற்கு தலைமை ஆசிரியர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என முதன்மை கல்வி அலுவலர் கா.கார்த்திகா தெரிவித்தார்.மாவட்ட அளவில் செயல்படும் 728 அரசு தொடக்க, 247 நடுநிலை பள்ளிகளில் 'ஹைடெக் லேப்' துவக்கப்பட்டு, இணையதள வசதிகள் வழங்கப்பட உள்ளன. இதில் தொடக்க பள்ளிகளுக்கு 'ஸ்மார்ட் போர்டு' அமைத்து, அதன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட உள்ளது. நடுநிலை பள்ளிக்கு தலா 10 கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி, புரஜக்டர் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட உள்ளன. ஜூன் 1 முதல் அனைத்து பள்ளிகளிலும் 'ைஹடெக் லேப்' செயல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பி.எஸ்.என்.எல்., மூலம் இணைய தள வசதி செய்து தரப்பட்டு வருகிறது. இந்த இணைப்புகளுக்கு தனியார்ஒப்பந்ததாரர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தலைமை ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 'ைஹடெக் லேப்' அமைக்க வழங்கப்படும் இணையதள வசதிக்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என அரசு தெரிவித்துள்ளது. பள்ளிகளில் ஜூன் முதல் 'ஹைடெக் லேப்': முதன்மை கல்வி அலுவலர் கா.கார்த்திகா கூறியதாவது: பள்ளி தலைமை ஆசிரியர்கள் எவ்வித கட்டணமும் இணையதள வசதிக்கு கட்ட தேவையில்லை. அரசே பி.எஸ்.என்.எல்., மூலம் இப்பணியை மேற்கொள்ளும்.பள்ளியில் இருந்து 1 கி.மீ., துாரத்திற்கு இணையதள வசதி செய்ய கட்டணம் இல்லை. அதற்கு மேல் ஆகும் செலவு தொகையினை மொத்தமாக கட்டாமல், அந்தந்த மாதாந்திர பில்லுடன் இணைத்து பெறப்படும். ஜூன் முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்த லேப் மூலம் பணிகள் நடைபெறும், என்றார்.