சிவகங்கை : பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா வெடிகுண்டு கலாசாரம் இன்றி அமைதி பூங்காவாக திகழ்கிறது என சிவகங்கையில் பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் பேசினார்.அவர் பேசியதாவது: 2004 முதல் 2014 வரை உச்ச அதிகாரம் பெற்ற அமைச்சராக சிதம்பரம் இருந்தும், ஒரு தொழிற்சாலை கூட சிவகங்கைக்கு வரவில்லை. பா.ஜ., வெற்றி பெற்றால் தொழிற்சாலை துவக்குவதன் மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். ஜூன் தேர்தல் முடிவு வெளியாகி பா.ஜ., ஆட்சியில் அமர்ந்ததும், ஆகஸ்டில் சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கப்படும். பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு, இந்தியா அமைதி பூங்காவாக திகழ்கிறது. மோடி 400 இடங்களை பெற்று, பா.ஜ., ஆட்சியில் அமர்ந்தால், அனைத்து திட்டங்களையும் சிவகங்கைக்கு கொண்டு வருவேன்.தொகுதியில் உலகத்தரம் வாய்ந்த கால்பந்து மைதானம் அமைத்து தரப்படும், என்றார்.பா.ஜ., நகர் தலைவர் உதயா, மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, நகர் பொது செயலாளர் பாலா, சதீஷ், அ.ம.மு.க., நகர் தலைவர் அன்புமணி, அ.தி.மு.க., தொண்டர் மீட்பு குழு இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் சுந்தரபாண்டியன், நகர் செயலாளர் கே.வி.,சேகர், தமிழ் தேசம் கட்சி, ஐ.ஜே.கே., உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.