உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை ரயில்வே ரிசர்வேஷனில்புரோக்கர் நடமாட்டம் அதிகரிப்பு  ஆர்.பி.எப்., போலீஸ் விசாரணை 

சிவகங்கை ரயில்வே ரிசர்வேஷனில்புரோக்கர் நடமாட்டம் அதிகரிப்பு  ஆர்.பி.எப்., போலீஸ் விசாரணை 

சிவகங்கை : சிவகங்கை ரயில்வே ரிசர்வேஷன் கவுன்டரில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) போலீசார் விசாரணை நடத்தினர்.சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் வழியே சென்னை -- ராமேஸ்வரம், ராமேஸ்வரம் -- வாரணாசி, விருதுநகர் - - திருச்சி, ராமேஸ்வரம் - - திருச்சி உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிவகங்கையில் இருந்து தினமும் சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு ரயிலில் 1864 பயணிகள் வரை சென்று வருகின்றனர். இவர்கள் மூலம் தினமும் ரயில்வேக்கு ரூ.1.10 லட்சம் வருவாய் கிடைக்கிறது.இந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆண்டுக்கு 6 லட்சத்து 82 ஆயிரத்து 351 பயணிகள் வந்து செல்வதன் மூலம், ரூ.4.02 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக சென்னை ரயிலில் செல்ல அதிகளவில் ரிசர்வேஷன் செய்கின்றனர். சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரிப்பால், அன்றாட பயணிகளுக்கு சென்னை செல்ல ரிசர்வேஷன் டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால், பல பயணிகள் ஏமாற்றத்துடன் ரயிலில் செல்ல முடியாமல் திரும்பி செல்கின்றனர்.சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவர்கள் கமிஷன் பெற சென்னைக்கு ரிசர்வேஷன் செய்து தருவதாக கூறி, செயல்படுகின்றனர். இதனால், அன்றாடம் சென்னைக்கு ரயிலில் செல்ல ரிசர்வேஷன் செய்யவரும் பயணிகளுக்கு சீட் கிடைக்காமல் போகிறது. இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட வணிக மேலாளருக்கு, சிவகங்கையை சேர்ந்தவர்கள் புகார் அளித்தனர்.இதையடுத்து, நேற்று மானாமதுரை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) எஸ்.ஐ., மற்றும் போலீசார் ரிசர்வேஷன் செய்தவர்களிடம் உரிய ஆதாரம் இருக்கிறதா, யாருக்காக ரிசர்வேஷன் டிக்கெட் எடுக்கப்படுகிறது. அதில் உண்மை தன்மை உள்ளதா என விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிவகங்கை ரயில்வே ரிசர்வேஷனில் புரோக்கர்கள் நடமாட்டத்தை தடுக்கும் வரை விசாரணை நடைபெறும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை