உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடைநிலை சுகாதார பணியாளர் செவிலியர், துணை செவிலியர் பணி

இடைநிலை சுகாதார பணியாளர் செவிலியர், துணை செவிலியர் பணி

சிவகங்கை:சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் கூறியுள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் சுகாதார அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையம், நகர் நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையிலான இடைநிலை சுகாதார பணியாளர், செவிலியர், துணை செவிலியர், மருத்துவமனை பணியாளர் காலிப்பணியிடங்கள் மற்றும் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஒப்பந்த அடிப்படையிலான ஒலிப்பதிவாளர், நுண்கதிர்வீச்சாளர், புள்ளி விபரக் குறிப்பாளர் மற்றும்மருத்துவமனை பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பம் வரும் ஜூலை 1 முதல் 15 மாலை 5:00 மணி வரை வரவேற்கப்படுகிறது.பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் http:/sivaganga.nic.in என்ற சிவகங்கை மாவட்ட வலைதளத்தில் வேலைவாய்ப்புப் பிரிவில்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவண நகல்களுடன் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் ஜூலை 15 மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பித்தல் வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை