உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டில் நகை திருட்டு

வீட்டில் நகை திருட்டு

சிவகங்கை : காளையார்கோவில் காளக்கண்மாய் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னறியாள் 60. இவரது மகள் உஷா. இவருக்கு காளையார்கோவில் பாத்திமா நகரில் வீடு உள்ளது. உஷாவும் அவரது கணவரும் கொல்கத்தாவில் ேஹாட்டல் நடத்தி வருகின்றனர். காளையார்கோவிலுக்கு வரும் போது இந்த வீட்டை பயன்படுத்தி வந்துள்ளனர். உஷாவின் அம்மா பொன்னறியாள் அவ்வப்போது காளக்கண்மாயில் இருந்து மகள் வீட்டிற்கு வந்து செல்வார். நேற்று முன்தினம் பொன்னறியாள், மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நாலரை பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு, ரொக்க பணம் ரூ.10,000 திருடு போனது தெரியவந்தது. பொன்னறியாள் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி