உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி -- திண்டுக்கல் ரயில் பாதை: தேவநாதன் உறுதி

காரைக்குடி -- திண்டுக்கல் ரயில் பாதை: தேவநாதன் உறுதி

சிங்கம்புணரி : சிவகங்கை பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தேவநாதன் சிங்கம்புணரியில் ஓட்டு சேகரித்தார். சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் சாமி கும்பிட்டு பிரசாரத்தை துவங்கிய அவர் சந்திவீரன் கூடம், மேலத்தெரு, பாரதி நகர், வேட்டையன்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடியின் ஆட்சி அமைய உள்ளது. வெற்றி பெற்றால் காரைக்குடி -- திண்டுக்கல் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவேன், வேலு நாச்சியார் பெயரில் மத்திய பல்கலையை கொண்டு வருவேன், என்றார். பிரசாரத்தில் பா.ஜ., மாவட்டத்தலைவர் சத்தியநாதன், துணைத்தலைவர் , ஏ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் சேது சிவராமன், ஒன்றிய தலைவர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை