உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் காரைக்குடி மாணவர்கள் விடுதி

திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் காரைக்குடி மாணவர்கள் விடுதி

காரைக்குடி- காரைக்குடியில் உள்ள ஒரு மாணவர் விடுதியில் இரு விடுதியை சேர்ந்த மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால் நெருக்கடியால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.காரைக்குடியில், சீர் மரபினர் கல்லுாரி மாணவர் விடுதி வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இதுகுறித்து எழுந்த புகார் காரணமாக தற்போது என்.ஜி.ஓ., காலனியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் இணைந்து செயல்பட்டு வருகிறது.பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் 75 மாணவர்கள் உள்ள நிலையில், சீர் மரபினர் விடுதியை சேர்ந்த 100 மாணவர்கள் என ஒரே விடுதியில் 175 மாணவர்கள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடநெருக்கடி காரணமாக, மாணவர்கள் தங்குவதற்கு சிரமம் ஏற்படுவதோடு காலையில் கல்லுாரிக்கு புறப்படுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.சிவகங்கை மாவட்டத்தில் முதன்முறையாக காரைக்குடி பருப்பூரணி அருகே , சீர் மரபினர் கல்லூரி மாணவர் விடுதி ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதில், ஸ்மார்ட் கிச்சன்,டைனிங் ஹால், உடற்பயிற்சி கூடம், செம்மொழி நுாலக அறை, கம்ப்யூட்டர் அறை, உள் விளையாட்டு அரங்கம்,நவீன கழிப்பறை உட்பட பல்வேறு வசதிகளுடன் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. தவிர தடையில்லா மின்சாரத்திற்கு சோலார் இணைப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் ஒரு அறைக்கு 4 பேர் என 36 அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த, மாணவர் விடுதியானது லோக்சபா தேர்தலுக்கு முன்பு திறக்கப்படுவதாக இருந்தது. தேர்தல் காரணமாக திறப்பு விழா கைவிடப்பட்டது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, புதிய கல்லுாரி விடுதியை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி