உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோவிலுார்-மானகிரி நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி துரிதம்

கோவிலுார்-மானகிரி நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி துரிதம்

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள கோவிலுாரில் இருந்து மானகிரி வரை செல்லும் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில், பி.பி.எம்.சி., திட்டத்தின் கீழ் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 7 மீட்டராக இருந்த சாலையானது 10.5 மீட்டராக அகலப்படுத்தி சாலை உறுதிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.கடந்த ஆண்டு, காரைக்குடி கோட்டையூர் பள்ளத்துார், கண்டனுார், கல்லல் சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது. 2025ம் ஆண்டு ஜூன் வரை பி.பி.எம்.சி., திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கியச் சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்