| ADDED : ஏப் 27, 2024 04:34 AM
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. லாடனேந்தல் வீரமாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் முடிந்தன.கடந்த 24ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காலை ஐந்து மணிக்கு விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து ஊர்காவலன் சாமி, முத்தையா சாமி, காமாட்சியம்மன், முனியாண்டி கோயில், அய்யனார் கோயில் உள்ளிட்டவற்றிற்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 9:15மணிக்கு வீரமாகாளியம்மன் கோயில் கோபுரத்தில் சிவாச்சார்யார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். விழாவை மதுரை திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலய முதல்வர் ராஜாபட்டர், திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ஆலய கற்பூர பட்டர், வெள்ளக்கரை சொக்கலிங்கம் சிவாச்சார்யார் நடத்தினர். ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் முத்துராமலிங்கம், லாடனேந்தல், பாப்பான்குளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.