உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாதுளை விளைச்சல் குறைவு: விலை உயர்வு

மாதுளை விளைச்சல் குறைவு: விலை உயர்வு

சிவகங்கை, : சிவகங்கையில் மாதுளை பழம் விலை உயர்ந்துள்ளது. 1 கிலோ ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது.விளைச்சல் குறைவு காரணமாக மாதுளை பழம் விலை உயர்ந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில், மாதுளை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. அங்கிருந்து தமிழகத்திற்கு விற்பனைக்கு வருகிறது.இம்மாநிலங்களில் மாதுளை பழங்களின் விளைச்சல், தற்போது குறைந்துள்ளது. புதிய பழங்களின் அறுவடை, ஜூலை இறுதியில் துவங்கும். வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது.சிவகங்கையில் உள்ள பழக்கடையில் ஒரு கிலோ முதல் தர மாதுளை 240 ரூபாய்க்கும், இரண்டாம் தரம், 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.பழ வியாபாரி கூறுகையில், மதுரை பழ மார்க்கெட்டில் இருந்து சிவகங்கைக்கு மாதுளை கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக வெளி மாநிலங்களில் மாதுளை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை